மதுராந்தகம் 
தமிழக செய்திகள்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: 893 தபால் வாக்குகள் பதிவாகின

மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் களை கட்டி உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அனைத்து அரசியில் கட்சியினரும் மதுராந்தகம் தொகுதியை முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அனைத்து அரசியில் கட்சியினரும் மதுராந்தகம் தொகுதியை முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் களை கட்டி உள்ளது.

இதற்கிடையே மதுராந்தகம் தொகுதி தேர்தலில் தபால் வாக்குகள் வாக்கு பதிவு செய்யும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இதில் மாற்றுத்திறனாளிகள் 480 வாக்காளர்களும், 80 வயதுக்கு மேற்பட்டோர் 451 பேர் என மொத்தம் 931 வாக்காளர்கள் இருந்தனர். அதிகாரிகள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பதிவு செய்தனர்.

நேற்று தபால் வாக்குகள் பதிவு செய்ய கடைசி நாளாகும். இதுவரை மொத்தம் 893 வாக்குகள் பதிவாகி உள்ளன. 38 பேர் வாக்களிக்கவில்லை.

SCROLL FOR NEXT