மரகதம் குமரவேல்
தமிழக செய்திகள்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் விவரம்..!

தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் 39.96 சதவீதம் (74048) வாக்குகள் பெற்றார்.

மதுராந்தகம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 184428 வாக்குகள் பதிவாகின. 864 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் நோட்டோவுக்கு 652 வாக்குகள் விழுந்தன.

மரகதம் குமரவேல் வெற்றி

தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் 39.96 சதவீதம் (74,048) வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 29.15 சதவீதம் (54,008) வாக்குகள் பெற்று 2-வது இடம் பெற்றார். அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 25.61 சதவீதம் (47450) வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன் 2,709 (1.46 சதவீதம்) வாக்குகள் பெற்று. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தி 1986 வாக்குகள் (1.07 சதவீதம்) பெற்று 5-வது இடம் பிடித்தார்.

தபால் வாக்கில் திமுக முதலிடம்

864 தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் பராந்தமன் 358 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 322 வாக்குகள் பெற்றார். த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 137 வாக்குகள் பெற்றார்.

மொத்தம் 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றில் இருந்தே மரகதம் குமரவேல் முன்னிலை பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார். அவர் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2026 பொதுத்தேர்தல் முடிவு

2026 பொதுத்தேர்தலில் அதிமுக 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தது. தவெக 62,090 வாக்குகள் பெற்றிருந்தது. திமுக 59,838 வாக்குகள் பெற்றிருந்தது.

SCROLL FOR NEXT