தமிழக செய்திகள்

மதுராந்தகம் தொகுதியில் பரபரப்பு- வாக்குவாதத்தால் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

மதுராந்தகம் தொகுதியில் 9-வது சுற்று எண்ணும்போது வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக கூறி அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மதுராந்தகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்து வருகிறார். மதுராந்தகத்தில் இதுவரை 8 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

வாக்குவாதம்

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் 9-வது சுற்று எண்ணும்போது வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக கூறி அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஏற்படுத்திய கூச்சல், குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை ராணுவத்தினர் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மீண்டும் வாக்கு எண்ணிக்கை

இதனை தொடர்ந்து, நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை சில நிமிடங்களில் மீண்டும் தொடங்கியது. இதுவரை நடைபெற்று முடிந்த சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் 31,117 வாக்குகள் பெற்று த.வெ.க. முதலிடமும், 20,701 வாக்குகள் பெற்று தி.மு.க. இரண்டாம் இடமும், 17,995 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. மூன்றாம் இடத்திலும் உள்ளது.

SCROLL FOR NEXT