தமிழக செய்திகள்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்.

மதுராந்தகம்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள படாளம், மேலவலம் ஆகிய பகுதிகளில் அமைந்து உள்ள 74, 75, 76, 77, 1, 2, 62, 63 ஆகிய வாக்குச்சாடி மையங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நெல்வாய் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்து அங்கு மாணவர்களுக்காக சமைக்கப்பட்டு இருந்த உணவினை சாப்பிட்டு பார்த்தார். மேலும் அங்குள்ள அரிசி, மற்றும் பருப்பு ஆகிய உணவு பொருள்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதன் பின்னர் மதுராந்தகம் ஏரி கால்வாயில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வரப்பு கால்வாய் சீரமைப்பு பணிகளையும் கலெக்டர் வீரப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT