தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மதியம் 1 மணி கள நிலவரம் என்ன?

இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முறையே 55.18%, 56.09%, 56.31% என பதிவாகியுள்ளது. கொளுத்து வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்குச்சாவடியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 15.99 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 17.55 சதவீதமும், 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 37.28 சதவீதமும் பதிவானது.

தொடர்ந்து கொளுத்து வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் மதியம் 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, மதியம் 1 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 55.18 சதவீதமும், தாராபுரத்தில் 56.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் 56.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT