தாராபுரம் 2-வது சுற்று: அதிமுக - 2ம் இடம், திமுக - 3ம் இடம்
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை.
மதுராந்தம் 2-வது சுற்று: திமுக - 2ம் இடம், அதிமுக - 3ம் இடம்
மதுராந்தகம், தாராபுரம் 2-வது சுற்றில் தவெக முன்னிலை
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர்.
மதுராந்தகம் முதல் சுற்று: தவெக முன்னிலை
தாராபுரம் முதல் சுற்று: தவெக முன்னிலை
மதுராந்தகம் முதல் சுற்று: தவெக - 660, அதிமுக - 375, திமுக - 335
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் 1,165 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை
தாராபுரத்தில் தவெக தொடர்ந்து முன்னிலை
தாராபுரத்தில் அதிமுக 2-ம் இடத்திற்கு முன்னேறியது
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை - திமுக 2-ம் இடம், அதிமுக 3-ம் இடம்
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை
தட்டாஞ்சாவடி தொகுதியில் 106 தபால் வாக்குகள் பதிவான நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் 55 ஓட்டுகளை வாங்கி உள்ளது.
95 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
70 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை.
மதுராந்தகம் தபால் வாக்கு நிலவரம்: தவெக 70, திமுக-59, அதிமுக-34
தாராபுரம் தொகுதியில் தவெக, திமுக இடையே கடும் போட்டி
தாராபுரம் தபால் வாக்கு நிலவரம்: தவெக-81, திமுக - 80, அதிமுக-52, சிபிஐ-2
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார். அவர் வந்த காரில் இருந்த தவெக கொடியை அகற்றிய பின் அனுமதிக்கப்பட்டார்.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா தபால் வாக்கில் முன்னிலை
மதுராந்தகம், தாராபுரத்தில் தபால் வாக்குகளில் தவெக முன்னிலை
மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஸ்ட்ராங் ரூம் திறப்பு. அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம்கள் திறப்பு.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதன்பின்னர் எந்திரங்களில் பதிவானவை எண்ணப்படும்.