தமிழக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

12-ந்தேதிக்கு பிறகு

இந்த 2 கட்சிகளின் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் விவரங்கள் வருகிற 12-ந்தேதிக்கு பிறகு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்று கடைசி நாளாகும்.

இதை தொடர்ந்து போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் ஒருவரை தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட உள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது மதுரையில் சேயோன் படப்பிடிப்பில் உள்ளார். 12-ந் தேதி தான் சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி சார்பில் 2 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT