போலீசார் விசாரணையில் போலி கணக்கு தொடங்கி புகைப்படங்களை பதிவேற்றம் ெசய்தவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சிரில் குமார் (20) என தெரிய வரவே அவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல் சரகு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவர் மீது மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியனின் புகைப்படங்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புதிதாக கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பது போல அலெக்ஸ் பாண்டியனின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள கணக்கு செயல்பட்டது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் செம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.
போலீசார் விசாரணையில் போலி கணக்கு தொடங்கி புகைப்படங்களை பதிவேற்றம் ெசய்தவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சிரில் குமார் (20) என தெரிய வரவே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.