மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பல நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த திரையரங்கில் பயங்கரமான தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது.
சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகே அமைந்திருக்கிறது இந்த சென்ட்ரல் தியேட்டர். இந்த திரையரங்கம் பல நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
மதுரையின் பழமையான திரையங்குகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த திரையரங்கம் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு மூடப்பட்டு பழைய பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்காக மாற்றப்பட்ட நிலையில், திடீரென அப்பகுதி பற்றி எரிய தொடங்கியுள்ளது.
புகையானது அதிகமாக பரவி நிலையில் அப்பகுதியே புகை மூட்டமானது. தகவலின்பேரில் அவ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர்.
மீனாட்சி கோவில் புதுபிக்கப்பட்டு குடமுழுக்கானது நடைப்பெற இருக்கும் நிலையில் இச்சம்பவமானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.