மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண மதுரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. நாளையில் இருந்து மக்கள் குவிய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் நாளை நெல்லையில் இருந்து மதுரை கூடல் நகருக்கும், நாளை மறுதினம் மதுரை கூடல் நகரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து நாளை (16-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ந்தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.
சிறப்பு ரெயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.