திருச்சியில் நவகிநத்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தடை கோரிய மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தடை விதித்துள்ளது . திருச்சி மாவட்டம் நவகிநத்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க அரசு எடுத்த நடவடிக்கைக்கு தடை கோரித் தொடரப்பட்ட வழக்கில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஏற்கனவே தேவைக்கு அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், புதிதாகக் கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் மாநிலம் முழுவதும் புதிய கடைகளைத் திறக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருச்சி நவகிநத்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு,இந்த இடைக்காலத் தடையைப் பிறப்பித்துள்ளது.
பொதுநலன் கருதி புதிய டாஸ்மக் கடைகளை திறக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கானது முடித்துவைக்கப்பட்டுள்ளது