இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வக்கீலின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார். இந்தநிலையில் இந்த மனு மீது நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.