சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.
இதில், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ். ரவிக்குமார், வழக்கறிஞர்கள் என்.திலீப்குமார், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன் ஆகியோர் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
அவர்களின் வாழ்க்கை வரலாறு விவரம் வருமாறு:-
நீதிபதி கே.கோவிந்தராஜன், 1972-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பிறந் தார். 1994-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய் தார். 1999-ம் ஆண்டு வரை குளித்தலை கோர்ட்டிலும், அதன்பின்னர் ஐகோர்ட்டிலும் பணியாற்றினார். ஐகோர்ட்டு மதுரை கிளையில், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார்.
நீதிபதி ரஜினீஸ் பத்தியால் 1973-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி பிறந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.ஏ., பி.எல். பட்டத்தை 1996-ம் ஆண்டு முடித்தார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். சட்டப்ப டிப்பை முடித்தார்.
நீதிபதி என்.ரமேஷ், 1973-ம் ஆண்டு வேலூரில் பிறந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை படித்தார்.
சிவில் நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றி அந்த பதவியை ராஜி னாமா செய்துவிட்டு, 2009-ம் ஆண்டு மீண்டும் வக்கீலானார். பல் வேறு வழக்குகளில் ஆஜராகி வந்த இவர், மத்திய அமலாக்கத் துறை சிறப்பு குற்றவியல் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
நீதிபதி ஜி.கே.முத்துக்குமார் 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பிறந்தார். பெங்க ளூரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, வக்கீலாக பதிவு செய்தார். 2020-2021-ம் ஆண்டுகளில் இவர் தமிழ்நாடு அர சின் சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றினார்.
நீதிபதி ஆர்.ராஜேஷ் விவேகானந்தன், 1975-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள தாண்டவன்காடு ஆகும். ஸ்ரீவைகுண் டம் கே.ஜி.எஸ். பள்ளியிலும், பணிக்க நாடார் குடியிருப்பில் உள்ள ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.
மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து, 1998-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். முதலில் தந்தையிடம் ஜூனியராக பணி யாற்றி, பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.
மத்திய அரசின், துணை சொலிசிட்டர் ஜெனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியின் பெயர் ஆர்.முத்துலட்சுமி, மகன் மதுசூ தன் ராமகிருஷ்ணன். நீதிபதியின் தந்தை எஸ்.ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
நீதிபதி எஸ்.ரவிக்குமார், 1977-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பிறந் தார். சென்னை ஐகோர்ட்டில், வக்கீலாக பணியாற்றி வந்தார். சிவில், கிரிமினல் என்று ஏராளமான வழக்குகளில் ஆஜராகி திறம் பட வாதிட்டார். இவர் புதுச்சேரி மாநில அரசு பிளீடராக பணியாற்றி வந்தார்.
நீதிபதி என்.திலீப்குமார், 1980-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி பிறந் தார். சிவகாசியில் உள்ள எஸ்.எச்.என்.வி. மெட்ரிக்குலேசன் பள்ளி யில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல் லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 2002-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார்.
சென்னை, மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். இவரது தந்தை நாகராஜன், சிவகாசியில் தொழிலதிபராக உள்ளார். தாயார் பெயர் அமுதா. நீதிபதி திலீப்குமாரின் அக்காள் ஜெயந்தி, சிவகாசி யில் ஆசிரியையாகவும், அண்ணன் தர்மர் விருதுநகர் மாவட்டத்தில் வக்கீலாகவும் உள்ளனர்.
நீதிபதி என்.திலீப்குமாரின் மனைவி ராஜ முருகேஸ்வரி சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர்களது மகள் நபான்யா மீனாட்சி எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மகன் பெரிய சாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நீதிபதி எ.மனோகரன், 1978-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி பிறந் தார். எஸ்.ஆர்.எம். கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. மைக்ரோ பயா லாஜி பட்டப்படிப்பும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி யில் சட்டப்படிப்பையும், சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பையும் முடித்து, 2003-ம் ஆண்டு பார் கவுன்சி லில் நீதிபதி எ.மனோகரன் வக்கீலாக பதிவு செய்தார். 2016-2019-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அரசு பிளீடராக பணியாற்றினார்.
நீதிபதி பி.முருகன் 1974-ம் ஆண்டு மே 20-ந்தேதி பிறந்தார். திரு வண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி பி.முருகன், 1989-ம் ஆண்டு 10-ம் வகுப்பில் பள்ளியில் 3-வது மாணவனாகவும், 1991-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்றார். திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் பட்டப்படிப்பை முடித்தார்.
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வக் கீலாக தனியாக பணியாற்றியபோது, முதுகலை சட்டப்படிப்பை முடித்தார். அதைத்தொடர்ந்து 10 முதுகலை பட்டங்களையும், அரசி யல் அமைப்புச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இவர், தமிழ் நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.
நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சேலம் மாவட்டம், நங்கவள்ளி கிராமத் தில் பிறந்தார். அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு (1996-2001) சட்டப்படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார்.
ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிர காஷ், தற்போது ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ள ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார்.
2014-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை புதுச்சேரி அரசின் சட்டத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
நீதிபதி என்.குணசேகரன், 1976-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி கோவையில் பிறந்தார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.எஸ்சி., படித்த நீதிபதி என்.குணசேகரன், கோவை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, 2002-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். 2014-ம் ஆண்டு நடந்த மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றிப் பெற்று நெல்லை மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட் டார். பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி தற் போது, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி எஸ்.அல்லி 1966-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி பிறந்தார். 6 சகோதரிகளுடன் பிறந்த நீதிபதி எஸ்.அல்லி, சீர்காழி தாலுகாவில் உள்ள வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், சிதம்பரம் நந்தனார் பெண்கள் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் மாஜிஸ்திரேட்டு பத விக்கான தேர்வில் வெற்றி பெற்று கும்பகோணம் மாஜிஸ்திரேட்டாக பதவி ஏற்றார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக பணியாற்றி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.
இவர்களுடன் நீதிபதிகள் எம்.டி.சுமதி, பி.முருகேசன், டி.திருமகள் ஆகியோரும் பதவி ஏற்கின்றனர்.