சிவி சண்முகம் 
தமிழக செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சி.வி.சண்முகம் வெற்றியை எதிர்த்து, வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், மைலம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது. முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, நீதிபதி தீர்ப்பளித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மைலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் வழக்கு

அவரது வெற்றியை எதிர்த்து, வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மைலம் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT