தமிழக செய்திகள்

2026-ல் தான் தமிழ்நாட்டிற்கு சுதந்திரம்- அமைச்சர் ஆனந்த்

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நேற்று பிரசாரம் செய்தார்.

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நேற்று பிரசாரம் செய்தார்.

கூட்டத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் பேசியதாவது:-

சுதந்திரம்

மதுராந்தகம் மண்ணின் மகள் மரகதம் குமரவேல் சிறந்த வேட்பாளர். உங்க தொகுதியின் காப்பாளர். யார் என்ன பிரச்சனைகளை எடுத்து கொண்டு வந்தாலும், சிரித்த முகத்தோடு அதை சரி செய்து தரக்கூடிய சிறந்த பெண்மணி. அவருக்காக வாக்கு சேகரித்து நான் செல்கிறபோது பல தாய்மார்களை பார்த்தேன்.

சுதந்திரம்

அதில் ஒரு அம்மா சொன்னாங்க.. 1947 ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.. ஆனா 2026-ல்தான் தமிழ்நாட்டுக்கே சுதந்திரம் கிடைத்தது என்று கூறினார். அதற்கு காரணம் நம்ம முதலமைச்சர் விஜய். அன்று தளபதி.. நேற்று வெற்றி தலைவர்.. இன்று முதலமைச்சர்.

வேட்பாளர்

வேட்பாளர் என்றால் தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர் அல்ல, மக்கள் அழைக்காமலேயே மக்களின் பிரச்சினையைத் தேடி வருபவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதி. பதவி என்பது அதிகாரம் அல்ல, மக்களுக்குச் சேவை செய்வதற்கான பொறுப்பு! வாக்கு என்பது வெறும் ஒரு பட்டனை அழுத்துவது அல்ல, நம் தொகுதியின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பது.

மரகதம்

மதுராந்தகம் மண்ணுக்கு இன்று ஒரு புதிய நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கையின் பெயர் மரகதம் குமரவேல். அவர் உங்கள் வேட்பாளர் மட்டுமல்ல… உங்கள் வீட்டுப் பெண். உங்கள் குரல். உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு. உங்கள் தொகுதியின் காப்பாளர்.

வெற்றி விழா

மதுராந்தகம் மண்ணில் நமது முதலமைச்சரின் பாதம் பட்டுவிட்டது.. இன்று முதல் அவரது கோட்டையாக மாறப் போகிறது.. திரும்பிய திசை எல்லாம் வெற்றி கொடி பறக்க போகிறது. எழுதி வைத்து கொள்ளுங்கள். இந்த தொகுதியில் எங்க தலைவர் வெல்லப்போவது உறுதி.. அதற்கான தொடக்கம் தான் இந்த நாள். மீண்டும் வெற்றி விழாவில் சந்திப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாராபுரம்

இந்நிலையில் அமைச்சர் என்.ஆனந்த் இன்று தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் த.வெ.க.விற்கு ஆதரவு திரட்டினார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் எங்கள் ஆதரவு முதலமைச்சர் விஜய்க்குதான் என்று அவரிடம் கூறினர். இதைக் கேட்ட அமைச்சர் என்.ஆனந்த் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT