தமிழக செய்திகள்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு - சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட் நோட்டீஸ்

அஜித் குமார் மரண வழக்கில் என் பெயரையும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

மதுரை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரை நகை திருட்டு வழக்கில் 2025 ஜூன் 27-ந் தேதி, விசாரித்து விட்டு வெளியே சென்ற பிறகு, சிறப்பு விசாரணை குழுவினர் அஜித்குமாரை, வெளியே அழைத்துச் சென்று விட்டனர்.

சி.பி.ஐ., கூடுதல் குற்றப்பத்திரிகையில் என் பெயர் உட்பட மேலும் 4 நபர்களின் பெயர்களை சேர்த்துள்ளது. சிறப்பு விசாரணை குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் மரண வழக்கில் தேவையின்றி என் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக பல போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அஜித் குமார் மரண வழக்கில் என் பெயரையும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.