வானிலை நிலவரம் 
தமிழக செய்திகள்

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

26-ந்தேதி புயலாக மாறும்

இதனிடையே, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 26-ந்தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள ARNAB என்ற பெயர் சூட்டப்படும். மேலும் நடப்பாண்டில் வங்கக்கடலின் முதல் புயலாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT