தமிழக செய்திகள்

சுற்றுச்சுவரை இடித்து அரசு பள்ளிக்குள் புகுந்த லாரி- 9 மாணவர்கள் காயம்

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு பள்ளி வளாகத்துக்குள் புகுந்தது.இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதிலிருந்த செங்கற்கள் சிதறி அருகே நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது விழுந்தன. மேலும், அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சைக்கிள்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி நொறுங்கின.

திருச்சி கிழக்கு அம்பிகாபுரம் முனியப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). லாரி டிரைவரான இவர் திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி லாரி ஒன்றை ஓட்டி வந்தார். லாரி தொட்டியத்தை அடுத்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு பள்ளி வளாகத்துக்குள் புகுந்தது.

மாணவர்கள் காயம்

இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதிலிருந்த செங்கற்கள் சிதறி அருகே நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது விழுந்தன. மேலும், அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சைக்கிள்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி நொறுங்கின.

அரசு மருத்துவமனை

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்த 7-ம் வகுப்பு மாணவர்களான சர்வேஷ், பிரவீன், ரித்திக், சபரீஷன், ஸ்ரீரக்சன், சர்வின், சஞ்சய், பாலகுரு, மவுலீஸ்வரன் ஆகிய 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த ரித்திக், சபரீஷன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணை

இந்த விபத்து தொடர்பாக தொட்டியம் போலீசார் டிரைவர் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT