தமிழக செய்திகள்

போரூர் சுங்கச்சாவடி அருகே லாரி மோதியதில் கணவர் கண்முன் மனைவி பலி

போரூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி பேராட்சி (வயது38). நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் தாம்பரத்தில் நடந்த விஷேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

விபத்து

போரூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் முத்துசாமி அவரது மனைவி பேராட்சி ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய பேராட்சி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

தனது கண் முன்னே மனைவி இறந்து போனதை கண்டு முத்துசாமி கதறி துடித்தார். தகவல் அறிந்ததும் மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான பேராட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

வடபழனி பகுதியை சேர்ந்தவர் சவுகர்ராஜ் (63). இவர் நேற்று இரவு அதே பகுதி ஆற்காடு சாலையில் உள்ள தியேட்டர் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோ திடீரென தறிகெட்டு ஓடி முதியவர் சவுகர்ராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சவுகர்ராஜ் அருகில் உள்ள "காம்பவுண்ட்" சுவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான சவுகர்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷேர் ஆட்டோ டிரைவரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT