தமிழக செய்திகள்

TN Assembly Election | தி.மு.க - தே.மு.தி.க. தொகுதி பங்கீடு முடிவாகவில்லை: எல்.கே.சுதீஷ்

நாங்கள் கூட்டணிக்கு சென்றதால் தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.

மாலை மலர்

ஆம்பூர்:

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களுக்கு தே.மு.தி.க. பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ், ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதி என முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு முடிந்த பின்னர், தி.மு.க. தலைமையும், தே.மு.தி.க. தலைமையும் ஆலோசித்து எந்தந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

நாங்கள் கூட்டணிக்கு சென்றதால் தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.

நாங்கள் 2006-ல் கட்சியை தொடங்கும்போது தமிழகத்தில் எங்களுக்கு இருந்த பலம் யாருக்கும் கிடையாது. குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு நான் 30 ஆயிரம் ஓட்டுக்களை வாங்கினேன். இருப்பினும் கூட்டணி என்று வரும் போது தான் வெற்றி கிடைக்கும். தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் குறித்து தேர்தர் முடிவில் தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.