வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் மெர்சி (வயது7), 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வீட்டில் இருந்த சிறுமி இட்லி வேக வைக்கும் தட்டை வைத்து விளையாடினார். அப்போது அதில் உள்ள துளையில் தனது கை விரலை விட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை விரல் இட்லி தட்டில் சிக்கிக் கொண்டது. இதனால் விரலை வெளியே எடுக்க முடியாமல் சிறுமி வலியால் அலறி துடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை வேலூர் பென்ட்லே ண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
டாக்டர்கள் இட்லி தட்டில் சிக்கியிருந்த சிறுமியின் விரலை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் காரல் மார்க்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தங்களிடம் இருந்த நவீன கருவிகளைக் கொண்டு மிகுந்த கவனத்துடன் இட்லி தட்டை லாவகமாக வெட்டி அகற்றினர். இதன் மூலம் தட்டில் சிக்கியிருந்த சிறுமியின் கை விரலை பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் சிறுமியின் விரல் மீட்கப்பட்ட சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தியது.
குழந்தைகள் பாத்திரங்களை வைத்து விளையாடும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.