தமிழக செய்திகள்

விஜய் முதலில் மக்கள் பிரச்சனையை வீதிக்கு வந்து பார்க்கட்டும்- அமைச்சர் கீதா ஜீவன்

2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.சினிமாவில் இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது அவர்," சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும், அதன் பிறகு அவர் குறித்து பதில் அளிக்கிறேன்" என்றார்.