தமிழக செய்திகள்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவை போற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!

அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.

அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT