சமீபத்தில் இடைத்தேர்த்ல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சிகளின் மாநில செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்.,
“தவெகவிற்கு ஆதரவு இல்லை என்பதால் திமுகவிற்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இந்த இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்ட தேர்தலாகவே இருக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட உள்ள இடதுசாரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் (செப்.15) அறிவிக்கப்பட உள்ளனர்.” என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த இடதுசாரி கட்சிகள் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை. கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் மூலம் ஐந்து முனை போட்டியாக தேர்தல் களம் மாறியிருக்கிறது. இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் தேர்தல் களம் பரப்பரப்பாக மாறியுள்ளது.