தமிழக செய்திகள்

122-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலை அருகே அவரது உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், தந்தி ஒன் ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள், நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT