தமிழக செய்திகள்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு

ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் சந்திப்பு.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

திமுக சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன், சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.