தமிழக செய்திகள்

அன்பில் மகேஷ் பணம் கேட்டதாகவோ வாங்கியதாகவோ ஆதாரம் இருக்கிறதா? - வழக்கறிஞர் வாதம்

சட்டப்படி பார்த்தால் சாட்சிகளாக உள்ளவர்களை தற்போது கைது செய்திருக்க வேண்டும்.

அன்பில் மகேஷ் எங்கும் தப்பி ஓட மாட்டார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி தான். மனிதத்தன்மையுடன் நடத்துங்கள் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன் விசாரணை நடைபெற்றது.

தனியார் பள்ளிகள் அங்கீகாரம் குறித்து வாதம் நடைபெற்றது.

அப்போது அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தில்,

* கைது செய்யப்படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே விசாரணை, சோதனை நடத்தப்பட்டது.

* விசாரணை, ரெய்டுக்கு முழு ஒத்துழைப்பு தந்தோம், வேறு ஏதேனும் ஆவணம் தேவைப்பட்டாலும் தருகிறோம்.

* காவல்துறை விசாரணையில் இருந்து எதையும் மறைக்க வேண்டிய தேவை இல்லை.

* ஒவ்வொரு ஆண்டுகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது ஊழலுக்கு வழி வகுக்கும்.

* எனவே 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்ற வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

* கோரிக்கை அடிப்படையில் தான் அங்கீகாரத்தை 20 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது.

* சட்டப்படி பார்த்தால் சாட்சிகளாக உள்ளவர்களை தற்போது கைது செய்திருக்க வேண்டும்.

* அங்கீகாரம் புதுப்பிக்கும் விதியை மாற்ற கோரியவர்கள் தற்போது சாட்சிகளாக உள்ளனர்.

* நியாயமான சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும்.

* முத்துக்குமார் சரணடைந்து விட்டார். அவர் தலைமறைவு என இன்னும் சொல்லக்கூடாது.

* அன்பில் மகேஷ் எங்கும் தப்பி ஓட மாட்டார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி தான். மனிதத்தன்மையுடன் நடத்துங்கள்.

* மும்பை தாக்குதல் வழக்கில் கைதாக அஜ்மல் கசாப்க்கு கூட சிறையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.

* அன்பில் மகேஷ் பணம் கேட்டதாகவோ அல்லது வாங்கியதாகவோ ஒரு ஆதாரம் இருக்கிறதா?

* வீட்டு உணவு மற்றும் மருந்து வழங்க வேண்டும் என்பது அடிப்படை கோரிக்கை.

* விசாரணை நடத்துங்கள் ஆனால் விசாரணையை துன்புறுத்தலாக மாற்றாதீர்கள் என்று அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

SCROLL FOR NEXT