வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மனைப் பிரிவுகள், விவசாய நிலங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், பல பகுதிகளில் அரசு பதிவுத் துறையின் நில வழிகாட்டி மதிப்பு தற்போதைய சந்தை விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்த இடைவெளியைச் சரிசெய்யும் வகையில், தமிழக அரசு சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக மாநிலம் முழுவதிலும் உள்ள நிலங்களின் வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்கட்டமைப்பு வளர்ச்சி அடைந்த பகுதிகள், புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் மெட்ரோ/தொழில்நுட்பப் பூங்காக்கள் அருகில் உள்ள கிராமங்களில் நில மதிப்பு அதிகபட்சமாக 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.
நிலத்தின் உண்மையான சந்தை மதிப்புக்கும் பதிவு மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு குறைவதால், சொத்து வாங்குவதில் நிலவும் முறையற்றப் பணப் பரிவர்த்தனைகள் குறையும்.
அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வதால், வங்கிகளில் நிலத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன் தொகையின் வரம்பு அதிகரிக்கும்.