மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இன்று காலை விமானத்தில் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, நேற்று எங்கள் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
இப்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கும், எங்களுக்கு எந்த ரோலும் இல்லை. நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த பிரச்சனையில் தேவையில்லாமல், எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை. நாங்கள் இதில் தலையிடவே இல்லை என்றார்.