தமிழக செய்திகள்

ஊட்டி மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்- சுற்றுலா பயணிகள் ஆர்வம்

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்திருப்பது கூடுதல் அழகை ஏற்படுத்தி உள்ளது.

குறிஞ்சி மலர்கள் கூட்டமாக பூக்கும் காலங்களில் ஒட்டுமொத்த மலைப்பகுதிகளும் நீல நிறத்தில் காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி வகை செடிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த செடிகளில் நீலம்-ஊதா நிறங்களில் பூக்கும் இந்த மலர்கள், அங்குள்ள மலைச்சரிவுகளை அழகிய மலர்ப்போர்வையாக மாற்றுகின்றன.

பூத்து குலுங்கும் மலர்கள்

மேலும் குறிஞ்சி மலர்கள் கூட்டமாக பூக்கும் காலங்களில் ஒட்டுமொத்த மலைப்பகுதிகளும் நீல நிறத்தில் காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்நிலையில் ஊட்டி காந்தி நகர் மலைப்பகுதியில் தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கி வருகின்றன. இதனை அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்திருப்பது கூடுதல் அழகை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்

குறிஞ்சி பூக்களில் பல இனங்கள் உண்டு. ஆனால் காந்தி நகர் பகுதியில் பூத்துள்ள மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி இனத்தை சேர்ந்தவையா என்பதை தாவரவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்துவது அவசியம்.

மேலும் ஊட்டி மலைப்பகுதியில் பூத்து நிற்கும் குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், அவை வளரும் இயற்கை சூழலை காக்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT