தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் தசரா பார்க்க சென்ற வாலிபர் கொலை

கும்பல் கல்லால் தாக்கியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சுமுத்து மகன் வேல்முருகன் (வயது 26). மெக்கானிக்.

வாக்குவாதம்

இவர் நேற்று இரவு தசரா பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அப்போது குலசேகரன்பட்டினம் கடற்கரை அருகே மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இதனால் அவர் தனது நண்பர் சதீசிடம்(28) தகவல் கூறி அழைத்துள்ளார்.

அதன்பேரில் சதீஷ் குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் வேல்முருகனுடன் 20 பேர் கொண்ட கும்பல் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கொலை

இதனால் சதீஷ் அந்த சண்டையை விலக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அக்கும்பல் வேல்முருகன், சதீஷ் ஆகிய இருவரையும் அடித்து தாக்கி உள்ளது. கும்பல் கல்லால் தாக்கியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். உடனே கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT