பொதுமக்கள் முற்றுகை 
தமிழக செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்- 50 பேர் கைது

4 அணு உலைகளுக்கான கட்டு மானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் முற்றுகை

கூடங்குளம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டு மானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அணுமின் நிலைய திட்டத்திற்காக கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தங்களது நிலங்களை வழங்கி இருந்தனர். அப்போது, நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தேர்வுகளில் கூடுதலாக 20 போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

நேர்முகத் தேர்வு

இந்நிலையில், அணுமின் நிலையத்தில் 255 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய கிராம மக்கள், இன்று காலை கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் வின்சி மணியரசு தலைமையில் அணுமின் நிலையம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார்

இதுகுறித்து தகவல் அறிந்த அணுமின் நிலைய அதிகாரிகள் மற்றும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.

இதனால் திருச்செந்தூர்-குமரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.