தமிழக செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு தற்போது செயல்பாட் டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த மின் நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ரகசிய ஆவணங்கள் கசிவு?

இந்த நிலையில், நேற்று 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வினியோகிப்பாளர் விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை இணையதளம் மூலம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த தகவலை தேசிய அணுசக்தி ஆணையம் மறுத்து உள்ளது.

இருப்பினும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தரவு கசிவுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், பாதுகாப்பு தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை. அணு பாதுகாப்பு தொடர்பான எந்த ரகசிய தகவலும் வெளியேறவில்லை. முக்கிய தகவல்கள் கசிந்தது என்பது உண்மையல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.