தமிழக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி... வரும் வாரம் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுமா? - அமைச்சர் விளக்கம்

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது.

மாலை மலர்

சென்னை சைதாப்பேட்டையில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளனர். வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது. எனவே, வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.