தமிழக செய்திகள்

கோயம்பேட்டில் செல்போன் பறித்த 2 பேர் கைது

போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தேவகுமார் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த நித்திஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரி, பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் கோயம்பேடு அருகே 100-அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த மர்ம நபர்கள் திடீரென மோகனசுந்தரத்தை வழிமறித்து மிரட்டி அவரது கையில் வைத்திருந்த விலை உயர்ந்த ஐ-போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

போலீசார்

தகவல் அறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தேவகுமார் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த நித்திஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT