மர்ம நபர்கள் இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து உள்ளனர். இதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கோவிலம்பாக்கம் அடுத்த மேடவாக்கம் பிரதான சாலை, வெள்ளக்கல் பகுதியில் டீக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் டீக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 பேர் புகுந்தனர். கல்லாப்பெட்டியில் பணம் இல்லாததால் கடையில் இருந்த சிகரெட் பண்டல்கள் மற்றும் பொருட்களை அள்ளிச்சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மர்ம நபர்கள் இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து உள்ளனர். இதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை கைது செய்ய மேடவாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.