கொரட்டூர் அருகே கருக்கு பிரதான சாலை டி.டி.பி.காலனியில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் 12 அடி அகலம், 15 அடி ஆழத்த்தில் இந்த பள்ளம் ஏற்பட்டு இருந்தது. பள்ளத்தை சரி செய்யும் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் சாலை அடைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கருக்கு பிரதான சாலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே 8 முறை இதேபோல் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
அப்பகுதியில் கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக சாலையின் மண் சரிந்து உள்வாங்கியதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது பள்ளத்தில் தண்ணீரை அகற்றி கழிவு நீர் குழாயின் கசிவை சரி செய்த பின் கான்கிரீட் கலவை உதவியுடன் பள்ளங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு சரிசெய்யப்படும் என்றனர்.