நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட்டில் தற்போது கிளைகோஸ் ஒரு கிலோ ரூ.290க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதால் பல்வேறு வெளிநாட்டு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கிளைகோஸ் காய்கறிக்கு தற்போது அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த காய்கறி ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாக கருதப்படுவதால் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வாங்கி செல்கின்றனர்.
சாதாரண நாட்களில் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகும் கிளைகோஸ், தற்போது வரத்து குறைவு காரணமாக ரூ.290 வரை உயர்ந்துள்ளது. மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “குளிர் பகுதிகளில் மட்டுமே விளையும் இந்த காய்கறிக்கு தற்போது நல்ல தேவை உள்ளது. ஆனால் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் சில நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.