தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று மாலை 3-வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பொதுவாக விஜய் ஹாக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வலம் வந்தார்.
முதல் இரண்டு முறை ஆளுநரை சந்தித்தபோது காக்கி பேண்ட் உடன் சென்றார். அப்போது அவருக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை. 3-வது முறையாக இன்று சென்று சந்தித்தார். அப்போது ஆளுநர், 120 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவை பெற்றுக்கொண்டு, தோளை தட்டிக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.
இன்று விஜய் வழக்கத்திற்கு மாறாக காக்கி பேண்ட்டிற்குப் பதிலாக ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் உடன் சென்றிருந்தார். இந்த முறை வெற்றி கிடைத்துள்ளது. ஒருவேளை காக்கி வேண்டாம் என்று ஜோதிடர் சொல்லியிருப்பாரா?.
ஜோதிடரின் சில கருத்துகளை விஜய் கேட்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.