தமிழக செய்திகள்

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு நலன்சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

  • காவிரி குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது.

  • அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

  • வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.

  • இலங்கை சிறைபிடித்த 58 மீனவர்கள், 266 படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • நீட் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு மற்றும் நிதி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து இந்த டெல்லி பயணத்தின் போது, முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.