கேரளம் அரசுப் பணத்தில் ஹெலிகாப்டரை வாடகை எடுத்து கொச்சியில் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வுரும் மாமனாரை (father-in-law) பார்ப்பதற்காக கொச்சி சென்றதாக வி.டி. சதீசன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில நேரங்களில் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது என்று சதீசன் குறிப்பிட்டுள்ளார்.
சதீசன் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு வி.டி. சதீசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எர்ணாகுளம் சென்று முதலீட்டாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த வி.டி. சதீசன் "சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணம் எதிர்கால முதலீட்டாளர்கள் குரூப்பை சந்திப்பதற்கானது. சில சமயம் மக்களை ரகசியமாக சந்திக்க வேண்டியுள்ளது. சில சமயம் வெளிப்படையா சந்திக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அவர்கள் முதலமைச்சரை சந்திக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.
முதலமைச்சர் முதலீட்டாளர்களை சந்திதார் என்றார், அது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய போக்குவரத்துத்தறை அமைச்சர் "மாநில அரசின் இலவச பிரியதர்ஷினி பேருந்து பயணத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் பெண்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதையே விரும்புகின்றனர்" எனக் கூறியிருந்தார். இது மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் வி.டி. சதீசன், "போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அக்கூற்றுக்காக வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே, இது குறித்து சர்ச்சையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.