உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் நெடுஞ்சாலைப் பணிகளை கடுமையாக பாதித்துள்ளதாக சுதீசன் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் நன்மை பயக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் சதீசன் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு சமீபத்தில் தடை விதித்தது. தமிழ்நாடு அரசின் இந்த திடீர் தடையால், கேரளாவில் நடைபெற்று வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.
இதனைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏராளமான கனிமவளங்கள் இருக்கும்நிலையில், அங்கு வெட்டி எடுக்காமல், தமிழ்நாட்டின் வளங்களை கேட்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.