அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்ற அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கே.சி.பழனிசாமி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை திரு கே.சி.பழனிசாமி அவர்கள் இன்று மாலை சென்னையில் சந்தித்தார்.#NirmalaSitharaman #FinanceMinister #Chennai #KCPalanisamy pic.twitter.com/hGEo6Mthpt