தமிழக செய்திகள்

கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்

காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்டார்.

கவின் ஆணவ கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் (27). இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், தனது அக்கா உடனான காதலை கைவிட வலியுறுத்தி கவினை அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.

இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மனைவி கிருஷ்ணகுமாரி, இவர்களது மகன் சுர்ஜித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் வன்னி அரசு

இந்நிலையில், கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.