கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கி மேலத்தெருவை சேர்ந்தவர் மரியசூசை. இவர் வீட்டின் அருகே மீட்பர்ராஜா என்பவரும் வீடு கட்டி வசித்து வருகிறார். இவர்கள் இருவரது வீட்டிற்கும் நடுவே உள்ள எல்லை மற்றும் வேலி அமைப்பது தொடர்பாக நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது பின்னர் அடிதடியாக மாறியுள்ளது.
இந்த மோதல் குறித்து மரியசூசையின் மனைவி ஜீலியன் அலெக்ஸ் சோபியா (38) மற்றும் மீட்பர்ராஜாவின் தரப்பில் ரெக்ஸ் ஆண்டனி ஆகிய இருவரும் சோழதரம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகார்களின் அடிப்படையில் போலீசார் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மீட்பர்ராஜாவின் மகன் ரெக்ஸ் ஆண்டனி (22) மற்றும் அவரது நண்பரான அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பாலா மகன் சஞ்சய் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.