குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூர் வாசிகள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தால் முப்புதர்கள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து சருகாகி மாறியுள்ளது. மேலும் நீர் ஆதார பகுதிகளிலும் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், தற்போது காட்டேரி அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துடன், தண்ணீர் வெளியேறாததால் பாறைகளில் வறட்சி ஏற்பட்டு நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி காய்ந்து போய் உள்ள நிலையை பார்த்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.