கதிர்நாயக்கன் பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் அந்த மின்வழித்தொகுப்பில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன் பாளையம், பாம்பே நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், கதிர்நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி.
மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.