தமிழக செய்திகள்

திமுக திட்டினால் விஜய் ஆட்சியில் நல்லது செய்கிறார்கள் என்று அர்த்தம் - நடிகை கஸ்தூரி

அரசியல்வாதிகள் மாறலாம். அதிகாரிகள் மாறுவது இல்லை. ஆட்சி மாறலாம். காட்சி மாற நேரம் ஆகும்.

கோவை விமான நிலைத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* திமுக திட்டினால் விஜய் ஆட்சியில் ஏதோ நல்லது செய்கிறார்கள் என்று அர்த்தம்.

* டாஸ்மாக் மூடுவது நல்ல விஷயம். இது புது ஆட்சி தானே.

* எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்க்க முடியாது. திமுக ஆட்சியில் பழகி விட்டார்கள். பொதுமக்களும் மாற வேண்டாம். விஜய் ஆட்சியில் எண்ணம் உள்ளது. செயல்பாட்டிற்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். நாமளும் ஒத்துழைக்க வேண்டும்.

* அரசியல்வாதிகள் மாறலாம். அதிகாரிகள் மாறுவது இல்லை. ஆட்சி மாறலாம். காட்சி மாற நேரம் ஆகும்.

* அதிபயங்கரமாக தோற்று விட்டார்கள். தோற்றதை ஒத்துக்கொள்ள முடியாமல் உதயநிதி அடுத்த 5 வருடத்திற்கு கதறுவதை கேட்டு, பார்த்து ரசிக்கலாம். அதற்கே விஜய்க்கு நான் பெரிய ஃபேன் ஆகிட்டேன்.

* எதிர்பாராத பெரிய வெற்றியை பெற்று இருக்கும்போது அந்த வெற்றியை பறிகொடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களிடம் போவது சாதாரண விஷயம் தான்.

* அதிமுக ஜெயித்தபோது மற்ற கட்சிகள் அந்த கட்சிக்கு வருவார்கள். ஸ்டாலின் ஜெயித்தபோது அந்த பக்கம் எல்லாரும் போனார்கள். இப்போது தவெக டிரெண்டிங்கில் இருப்பதால் அதுக்கு எல்லோரும் வருவார்கள். எதிர்மறையாக ஏதாவது நடந்தால் போய்விடுவார்கள். அரசியலில் இந்த மாதிரி வியாபாரிகள், சந்தர்ப்பவாதிகள் அதிகம் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடையாளம் தெரிந்துகொள்வதில் தான் தவெகவின் வெற்றியும் தோல்வியும் அடங்கி உள்ளது.

* கொள்கையில் என்ன எதிரி உள்ளது. தமிழக மக்களின் நலனை எல்லோரும் வேண்டுகிறோம். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான அரசு வேண்டும் என்கிறோம்.

* தன்னுடைய ஆட்சியில் காங்கிரசை நம்பி இருக்கிறார். அவருக்கு என்ன கொள்கை இருக்க முடியும். அதைவிட பாஜகவுடன் இணக்கமாக போவது நல்லது என்பது எல்லோருடைய கருத்தும் தான்.

* மத்திய அரசை பகைத்துக்கொண்டு தேவையில்லாத சர்ச்சையை விஜய் விலைக்கு வாங்க மாட்டார் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.