தமிழக செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்? - அன்புமணி

கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதன் உண்மைநிலை வெளிவர வேண்டும்.

* நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

* கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.

* உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.