பாலியல் வன்கொடுமை  
தமிழக செய்திகள்

கரூர்: 4 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி

சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை பாட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிராமத்தில் தாய் தந்தையுடன் அந்த 4 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறாள். நேற்று சிறுமியை பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பக்கத்து வீட்டு இளைஞனிடம் கேட்டுள்ளார்.

சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் சிறுமியை பாட்டியின் வீட்டின் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்

வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பாட்டியிடம் கூறியிருக்கிறாள்.

அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரமடைந்த 55 வயது பாட்டி, உடனடியாக அரிவாளை எடுத்துக்கொண்டு அந்த இளைஞனைத் தேடிச் சென்றுள்ளார்.

குளித்தலை பகுதியில் உள்ள ஒரு டீக் கடை அருகே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

10க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

போலீஸ் விசாரணை

பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.

சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

படுகாயம் அடைந்த இளைஞன், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

பலத்த காயமடைந்த வாலிபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து அரிவாளைப் பறிமுதல் செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 55 வயது பாட்டியைக் கைது செய்தனர்.

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனையில் உள்ள வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.